Asianet News TamilAsianet News Tamil

மோடி வேட்புமனுவை தூக்கிப் போடுங்க... தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கட்சி அதிரடி யோசனை!

முறையற்ற மற்றும் சட்டவிரோத முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குதிரை பேரம் நடத்தும் வகையிலான இந்த பொய்யைப் பயன்படுத்தி வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மோடி அப்படி பேசியது அதிர்ச்சியும்  ஆச்சரியத்தையும் அளிக்கிறது.
 

Trinamool congress urge election commission on modi's speech
Author
West Bengal, First Published May 1, 2019, 7:50 AM IST

குதிரை பேரத்தைத் தூண்டும் வகையில் பேசிய பிரதமர் மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
உத்தரப்பிரதேசம். மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, “மே 23-ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது தாமரை எல்லா இடங்களிலும் மலரும். உங்கள் (மம்தா) எம்.எல்.ஏ.க்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் இன்றுவரை எங்களுடன் தொடர்பில் உள்ளனர்” எனப் பேசினார்.

Trinamool congress urge election commission on modi's speech
குதிரைப் பேரத்தையும் கட்சித் தாவலையும் ஆதரிக்கும் வண்ணம் அமைந்த பிரதமரின் பேச்சுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரீக் ஓ பிரையன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.Trinamool congress urge election commission on modi's speech
அந்தக் கடிதத்தில், “முறையற்ற மற்றும் சட்டவிரோத முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குதிரை பேரம் நடத்தும் வகையிலான இந்த பொய்யைப் பயன்படுத்தி வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மோடி அப்படி பேசியது அதிர்ச்சியும்  ஆச்சரியத்தையும் அளிக்கிறது.
மோடி பேசியதற்கான சான்று பற்றி நீங்கள் மோடியிடம் கேட்க வேண்டும்.

Trinamool congress urge election commission on modi's speech

அவர் தக்க சான்றுகளைச் சமர்ப்பிக்க தவறினால் தேர்தல் நடத்தை விதியை மீறும் வகையில், தூண்டக்கூடிய, ஜனநாயகமற்ற முறையில் பேசியதற்காக பிரதமர் மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios