Asianet News TamilAsianet News Tamil

வளர்ப்பு மகளுக்கு இந்து முறைப்படி கோவிலில் திருமணம்... முஸ்லிம் தம்பதி அதிரடி..!

கேரளாவில் வளர்ப்பு மகளுக்கு முஸ்லிம் தம்பதியினர் இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The Hindu Formal Marriage In The Hindu Temple Muslim Couples Action
Author
Kerala, First Published Feb 19, 2020, 11:02 AM IST

கேரளாவில் வளர்ப்பு மகளுக்கு முஸ்லிம் தம்பதியினர் இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம், காசர் கோடு அருகே உள்ள மேலப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி கதீஜா. இந்த தம்பதியின் வீட்டிலும், தோட்டத்திலும் வேலை பார்த்து வந்தவர் சரவணன். இவரது மகள் ராஜேஸ்வரி. எதிர்பாராதவிதமாக சரவணனும், அவரது மனைவியும் இறந்துவிட்டனர். பெற்றோரை இழந்தபோது ராஜேஸ்வரிக்கு 10 வயது தான் ஆகியிருந்தது.

சிறு வயது முதல் ராஜேஸ்வரி அப்துல்லா வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம். அப்துல்லாவின் மகன்களான ‌ஷமிம், நஜீப், ஷெரீப் ஆகியோருடன் விளையாடி மகிழ்வார். இதனால், ராஜேஸ்வரியை அப்துல்லாவும், அவரது மனைவியும் தங்களது மகள் போலவே கருதினார்கள். பெற்றோரை இழந்து தவித்த ராஜேஸ்வரியை அவர்கள் தங்களது வளர்ப்பு மகளாக தத்தெடுத்துக்கொண்டனர்.

The Hindu Formal Marriage In The Hindu Temple Muslim Couples Action

தத்தெடுக்கப்பட்ட ராஜேஸ்வரியை அவர்கள் இந்து முறைப்படியே வளர்த்துவந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு 22 வயது ஆனதால் அவருக்கு மாப்பிள்ளை தேடினார்கள். அப்போது கன்ஹன்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவரது ஜாதகம் ராஜேஸ்வரிக்கு பொருத்தமாக அமைந்ததால் அவர்கள் இருவருக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி-விஷ்ணு பிரசாத் திருமணத்தை இந்து முறைப்படி அந்த பகுதியில் உள்ள பகவதி கோவிலில் அப்துலா-கதீஜா தம்பதியினர் நடத்தி மகிழ்ந்தனர். இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதுபற்றி அப்துல்லா கூறும்போது, ’’ராஜேஸ்வரியை நாங்கள் தத்தெடுத்த பிறகு அவரை இந்து முறைப்படியே வளர்த்தோம். தற்போது திருமணத்தையும் கோவிலில் வைத்தே நடத்தி உள்ளோம். எங்களுக்கு மகள் இல்லாத குறையை தீர்த்த ராஜேஸ்வரி தற்போது கணவருடன் புதிய வாழ்க்கையை தொடங்க மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை பிரிந்த சோகம் எங்களை வாட்டுகிறது. எங்களின் செல்ல மகள் வீட்டிற்கு வரும் நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறோம்.The Hindu Formal Marriage In The Hindu Temple Muslim Couples Action

எனது மகன்கள் 3 பேரும் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர்களால் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ராஜேஸ்வரியின் திருமண செலவுகளை அவர்கள்தான் ஏற்றுக்கொண்டனர். விடுமுறை கிடைக்காததால் இந்த திருமணத்தில் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. விரைவில் ராஜேஸ்வரியை வாழ்த்த அவர்கள் 3 பேரும் ஊருக்கு வர உள்ளனர்’’எனத் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios