Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளால் முதல்வர் மகளுக்கு தலைவலி... தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு..!

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடும் மக்களவை தொகுதியில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

telangana kavitha nizamabad candidate
Author
Telangana, First Published Mar 29, 2019, 1:16 PM IST

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடும் மக்களவை தொகுதியில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தெலங்கானாவில் முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் நிஜாமாபாத் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா போட்டியிடுகிறார். தற்போது நிஜாமாபாத் தொகுதியின் எம்.பி.யாக உள்ள அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். telangana kavitha nizamabad candidate

கடந்த வாரம் நடைபெற்ற பொதுச்கூட்டத்தில் பேசிய கவிதா பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும் 1000 விவசாயிகள் அவர்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறினார். இந்நிலையில், அவரது அறிவுரை அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அவர் போட்டியிடும் நிசாமாபாத் தொகுதியில் 178 விவசாயிகள் உள்பட மொத்தம் 185 பேர் போட்டியிடுகின்றன.telangana kavitha nizamabad candidate

இதனையடுத்து முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடும் தொகுதியில் வாக்குசீட்டு முறையை கொண்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் 63 வேட்பாளர்கள் மற்றும் கூடுதலாக நோட்டா மட்டுமே இடம் பெற முடியும் என்பதால் வாக்குச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios