தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு: ஹிதேஷ் ஜெயின்
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையேயான திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என ஹிதேஷ் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
தன்பாலின திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாஜகவைச் சேர்ந்த ஹிதேஷ் ஜெயில் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிதுள்ள அவர், "இன்று, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையேயான திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது" எனத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சிறப்புத் திருமணச் சட்டம் 1954 மற்றும் இந்து திருமணச் சட்டம் 1955 போன்ற பல சட்டங்கள் தன்பாலின திருணத்தை அங்கீகரிக்கவில்லை என்று மனுதாரர்கள் கூறினர். உச்ச நீதிமன்றம் திருமணம் ஒரு அடிப்படை உரிமை அல்ல என்று ஒருமனதாக உறுதி செய்திருக்கிறது. சிறப்பு திருமணச் சட்டத்தின் 4வது பிரிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற கருத்து மனுவின் முக்கிய அம்சமாக இருந்தது. அது நீக்கப்படவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
"சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு நாட்டை அழைத்துச் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றம் சிறப்புத் திருமணச் சட்டத்தில் தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்தால், அது சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொண்டதாகிவிடும். எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தில் மாற்றம் தேவையா என்பதை நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது" என ஹிதேஷ் ஜெயின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்பாலின திருமணத்திற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் அளிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை அறிவித்துள்ளது. ஐந்து நீபதிகள் கொண்ட இந்த அமர்வில் சட்ட அங்கீகாரத்துக்கு 2 நீதிபதிகள் ஆதரவாகவும் 3 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு கூறியுள்ளனர். இதன் மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது என்று முடிவாகியுள்ளது.