25 ஆண்டுகால சாதனை படைத்த ஏசியாநெட்..! மக்களின் பேராதரவுக்கு நன்றி..! 

ஏசியாநெட் நியூஸ் கடந்த 25 ஆண்டுகளாக மிக உயர்ந்த தரத்தில் செய்திகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் நேற்று l & B ministry (தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்) யாரும் எதிர்பாராத வகையில் ஏசியாநெட் சேனலின் ஒளிபரப்பை நிறுத்தியது, கடந்த 25 வருடங்களிலேயே இதுதான் முதல் முறை 

இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும், நிறுவனமும் போலவே, நாமும் நம் நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்படுகிறோம். இதிலிருந்து ஒருபோதும் மாறுபட்டு இயங்கியது கிடையாது.தெரிந்தோ தெரியமாலோ ஒரு சிறு தவறு நடந்தாலும், அதனை எதிர்கொண்டு உடனே திருத்திக் கொள்வதிலும் ஒருபோதும் தயங்குவதில்லை. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் எங்கள் கடமைகளை முழுமையாகவும் புரிந்துக்கொள்கிறோம்.

எவ்வாறாயினும், ஊடகங்கள் உட்பட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சட்டபூர்வமான செயல்முறையில் தீர்வு கிடைத்திட நமது ஜனநாயகம் உறுதி செய்கிறது. ஆனால் l & B அமைச்சகம் எந்த ஒரு முன் அறிவிப்பும், தகுந்த காரணமும் இன்றி 48 மணி நேரத்திற்கு ஒளிபரப்பாகி நிறுத்தியது நியதிக்கு மாறாக நடப்பதை காட்டுகிறது  

மக்களிடம் நன்மதிப்பை பெற்று கால் நூற்றாண்டைகடந்துவிட்டது asianetnews.com மற்றும் ஏசியா நெட் சுவர்ணா செய்தி மீது மக்களுக்கு அதீத நம்பிக்கை உண்டு. எதையும் "நேர்த்தியாக, தைரியமாக மற்றும் இடைவிடாமல் "வழங்குவது என்பது எங்கள் முழக்கம் (தாரக மந்திரம்) மட்டுமல்ல, எங்கள் தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் அடிப்படையான ஒன்று. எங்கள் பார்வையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நாங்கள் அளித்த வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம். எதற்கும் சமரசம் ஆகாமல் உண்மையை நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைப்போம் 

அரசியலமைப்பு சட்டம் Art 19, கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு சுதந்திரமான மற்றும் சுதந்திரமான ஊடகம் நமது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தூண். இந்த சுதந்திரத்தை குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் நியாயப்படுத்தல் என்பது நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் மதிப்புகளை பாதிக்ககூடியாக அமையும் 

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஒளிபரப்பு தடைசெய்ததை உறுதிப்படுத்திய பின்னர், ஒளிபரப்பு தடை செய்ததில் அமைச்சகத்தின் தரப்பில் இருந்து சிறு தவறு இருந்தாலும், அதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடக சுதந்திரத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அறிவித்த பின்னர்  இந்த சம்பவம் பிரதமரின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எந்த ஒரு நிலையிலும் தொடர்ந்து பேராதரவு கொடுத்து வரும் மக்களுக்கு ஏசியாநெட் நியூஸ் மாபெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. நாங்கள் எங்கள் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறோம், எங்கள் கடமையை மிகவும் நியாயமாக, துல்லியமாக தொடர்ந்து செய்வோம்.

எம் ஜி ராதாகிருஷ்ணன்
ஆசிரியர்
ஏசியாநெட்  நியூஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட்