பிரபல தயாரிப்பாளர் மகனும் நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராமும் நடிகை ஸ்ரீ ரெட்டியை வற்புறுத்தி செக்ஸ் லீலையில் ஈடுபட்ட  லீலை போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி இந்தப் புகைப்படம் தற்போது வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதனையடுத்து அணங்கு வந்த போலீசார் அவரை சமாதானபடுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னணி செய்தி தொலைக் காட்சியில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தயாரிப்பாளரின் மகன் என்னை யூஸ் பண்ணிக் கொண்டார். அவர் என்னை யூஸ் பண்ணிய ஸ்டுடியோ அரசுக்கு சொந்தமானது. அந்த நபரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.  என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் லீலை புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன். அது தான் என் பிரம்மாஸ்திரம் என்று  தெரிவித்திருந்த ஸ்ரீ ரெட்டி.

மேலும் பேசிய ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளரின் மகன் அழைத்ததால் ஸ்டுடியோவுக்கு சென்றேன். நான் பேசுவதற்காக மட்டுமே ஸ்டுடியோவுக்கு சென்றேன். ஆனால் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட நான் இல்லை என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் கூறியதை போலவே, ஸ்டுடியோவில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டது பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம் தான் என்று ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதேபோல அந்த லீளைப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

போட்டோவைப் போட்ட ஸ்ரீரெட்டி, அபிராம் உனக்கு வெட்கமாக இல்லையா? ஸ்டுடியோவில் என்ன செய்தாய் என்பது உனக்கே தெரியும். அதற்கான ஆதாரத்தையும் காண்பித்துவிட்டேன். இனி எனக்காக தலித் மற்றும் பெண்கள் அமைப்புகள் முன்வந்து போராடி நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று ஸ்ரீ ரெட்டி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தானும், அபிராமும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இருவரும் உதட்டோடு உதடு வைத்து போஸ் கொடுத்துள்ளனர். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி அபிராமை திட்டி போஸ்ட் போட்டுள்ளார். ஸ்ரீ ரெட்டி, அபிராமின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது