பீகார் மாநிலத்தில் இரண்டு பாம்புகள் இணைந்து நடனம் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் பாம்புகளின் நடனம் அரங்கேறியுள்ளது. அடிக்கி வைக்கப்பட்ட செங்கற்கள் மீது இரண்டு பாம்புகள்  இணைந்து நடனமாடி  தங்கள் காதலை வெளிப்படுத்தும் வண்ணம் பிண்ணிப்பிணைந்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

ஊர்வனவற்றுள் மனிதன் அதிகம் பயப்படுவது பாம்பு என்று சொல்லலாம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என சொல்வதுண்டு. 
இரண்டு பாம்புகள் பிண்ணிபிணைந்து நடனமாடுவதைப் பார்த்திருப்போம். அது ஏன் அப்படி ஆடுகின்றது என பலரும் வியந்திருப்பர். இதுவும் ஒரு இயற்கை நிகழ்வே. பாம்புகளில் அந்த விஷயத்துக்கு அழைப்பதில் முக்கிய பங்கு பெண் நாகத்திற்கு தான் உண்டு. பெண் நாகம் அதற்கு ரெடியானதும், தன் உடலில் ஒரு நறுமணத்தை வெளிப்படுத்தும். இதனால் ஈர்க்கப்படும் ஆண் நாகம் சேர்ந்து பிண்ணிக் கொண்டு நடனமாடும். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.