சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது  சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசிதரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிதரூர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சசிதரூர் டெல்லி போலீசில் ஆஜராக 7-தம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். சசிதரூர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சசிதரூருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.