கல்லூரி மாணவி ஒருவருக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகாரை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி, தனது தாயை மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தபோது வெரோனிக்கா என்பவரை சந்தித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து மாணவியும், வெரோனிகாவும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வெரோனிகா அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி தெரிவித்துள்ளார். அப்போது வெரோனிகா, கடந்த ஜென்மத்தில் நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், எனவே ஆசைக்கு இணங்கும்படி மாணவியை வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. 

வெரோனிகாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார்.அப்போது சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். வெரோனிகாவிடம் நடத்திய விசாரணையில், பல நம்பர்களில் இருந்து மாணவிக்கு போன் செய்து தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. 

தான் ஒரு ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், போன ஜென்மத்தில் தானும் அந்த மாணவியும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வெரோனிகா ஆஜர்படுத்தப்பட்டார். பிரிவு எண் 452, 366, பிரிவுகளின் கீழ்வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளன.