நடுரோட்டில்  பெண்ணை  நாசம் செய்த  4  பேர் கைது ....!  பெங்களூரில்  போலிஸ் அதிரடி ...!!!

கடந்த  2 நாட்களாக  ஊடகம் மற்றும்  சமூக வலைத்தளங்களில், வைரலாக  பரவி வரும் ஒரு வீடியோ பெங்களூருவில்  ஒரு  பெண்ணிடம்   பாலியல் தொந்தரவு  கொடுப்பதை காட்டுகிறது.

பெங்களூரை  சேர்ந்த  கம்மனஹள்ளி என்ற  இடத்தில், புத்தாண்டு   கொண்டாட்டம்  முடித்துவிட்டு,  இரவு  தாமதமாக  வீடு திரும்பியுள்ளார்  ஒரு பெண் .

நடந்தது என்ன ?

தனியாக  வீடு திரும்பிய அந்த  பெண்ணிடம் , அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில்  சென்ற  இரண்டு நபர்கள் ,  அப்பெண்ணிடம்  பாலியல்  தொந்தரவு  செய்துள்ளனர். பின்னர் அப்பெண்ணை  வண்டியில் ஏற்ற  முயன்ற  போது, அப்பெண் மறுத்ததால் , அவளை  கீழே  தள்ளிவிட்டு , வண்டியை  வேகமாக  கிளப்பும்  காட்சி   அனைவரின்  மனத்தை   உலுக்குகிறது.

இந்த காட்சி , அங்கிருந்த  வீட்டில் பொருத்திவைக்கபட்டுள்ள சி சி டி வி  கேமீராவில் பதிவாகி உள்ளது.

போலீசார் நடவடிக்கை :

 இதுவரை  பாதித்த  பெண்  எந்த  புகாரும்  கொடுக்கவில்லை .  இருந்தபோதிலும், போலிசாரே கிரிமினல்  பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்து, தீவிர விசாரணை  நடத்தி, தற்போது  இந்த  வழக்கு தொடர்பாக  4  பேரை  கைது செய்துள்ளனர்.மேலும்  அவர்களிடம்  பல்வேறு  கோணத்தில்  விசாரணை  நடத்தி  வருகின்றனர்.

தனியாக  வந்த  பெண்ணிடம் இது போன்ற தகாத  செயல்களில் ஈடுபட்ட   சம்பவம்   பெங்களூர்  மக்களிடையே  ஒரு பரபரப்பை  எற்படுதியுள்ளது