Asianet News TamilAsianet News Tamil

செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளானார் தமிழ் கவர்னர் - மேகாலயா ஆளுநருக்கு சிக்கல்

sex complaint-on-megalaya-governor
Author
First Published Jan 26, 2017, 4:26 PM IST


பெண்களிடம்  தவறாக  நடந்ததாக  சர்ச்சையில் சிக்கி உள்ள  மேகாலயா  கவர்னர் சண்முகநாதனை உடனடியாக ஆளுநர்  பதவியிலிருந்து  நீக்க வேண்டும் என  ஆளுநர்  மாளிகை  பணியாளர்கள் 80  பேர் கூட்டாக  பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழ்நாட்டின்  தஞ்சை மாவட்டதை பூர்வீகமாக  கொண்ட சண்முகநாதன்  பல  உயர் பதவிகளை  வகித்தவர் ஆவார். கடந்த  2015 ஆண்டு  மே மாதம்  மேகாலயா கவர்னராக  பொறுப்பேற்ற  இவருக்கு ,  மணிப்பூர் மாநிலத்தையும்  கவனிக்கும் பொறுப்பு  கூடுதலாக  கொடுக்கப்பட்டது.

sex complaint-on-megalaya-governor

இந்நிலையில் , சண்முகநாதனின்  மீது,  ஒரு பெண்  கடுமையான  குற்றசாட்டுகளை  சுமத்தினார் .இதனை தொடர்ந்து அங்குள்ள பணியாளர்கள்  ஆளுநருக்கு  எதிராக போர்க்கொடி   தூக்கியுள்ளனர். சண்முகநாதன்  ராஜ்  பவன்  மாளிகையை லேடீஸ் கிளப்பாக  மாற்றி விட்டார் என்றும்,  வேலை தேடி வரும்  பெண்களை அலுவல் இல்லாத  நேரங்களிலும்  உள்ளே வர பாதுகாப்பு  அதிகாரிகளுக்கு   கவர்னர் நேரடியாக  உத்தரவிடுகிறார்  என்றும்  குறிப்பிட்டுள்ளனர் .

மேலும்,  அவ்வாறு  உள்ளே வரும் பெண்களிடம்  அவ்வப்போது  சில்மிஷங்களில்  ஈடுபடுகிறார்  எனவும்  புகாரில் தெரிவித்துள்ளனர்.

sex complaint-on-megalaya-governor

அனால் இந்த குற்றசாட்டுகளை , மறுத்துள்ள சண்முகநாதன் தாம் பெண்கள் மீது மிகுந்த  மரியாதை  வைத்திருப்பதாகவும், தவறான  நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழராக இருந்து மேகாலய ஆளுனராக  பொறுபேற்றுள்ள  இவரால் எழுந்துள்ள சர்ச்சை , தற்போது தமிழர்கள் மத்தியில் பெரும்  கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios