நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு!ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா ஏர்போர்ட்டில் வைத்து கைது
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகள் அடங்கிய 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பிரஜ்வல் ரேவண்ணா குற்றச்சாட்டுக்கு டி.கே.சிவக்குமார் பதில்!
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மன் சென்றுள்ளார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இதனிடையே கடந்த 28-ம் தேதி சமூக வலைதளங்களில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மே 31-ம் தேதி நாடு திரும்புவதாகவும், சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நான் கூப்பிடும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வரலைன்னா! வீடியோவை வெளியிட்டு விடுவேன்! பெண்ணை மிரட்டிய வாட்ச்மேன்!
இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரில் தங்கியிருந்த ரேவண்ணா லுஃப்தான்ஸா விமானம் மூலம் பெங்களூரு கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் வந்தடைந்தார். நீதிமன்றம் அளித்த கைது வாரண்டை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரிடம் எஸ்ஐடி அதிகாரிகள் வழங்கினர். இமிகிரேஷன் சோதனைக்கு பின் பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இன்று காலை 10 மணி அளவில் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராகிறார்