Asianet News TamilAsianet News Tamil

சபரிமலை விவகாரம்... கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

குருவாயூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களை போல சபரிமலைக்கு என கேரள அரசு தனிசட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜனவரி 3-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பந்தளம் அரண்மனை சார்பாக தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

sabarimala issue... supreme court order Kerala government
Author
Delhi, First Published Nov 20, 2019, 1:49 PM IST

குருவாயூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களை போல சபரிமலைக்கு என கேரள அரசு தனிசட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்ந்து வருகிறது. சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயன்றது. ஆனால், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

sabarimala issue... supreme court order Kerala government

கடந்தாண்டு மண்டல கால பூஜையின் போது, சபரிமலைக்கு செல்வதற்கு பல பெண்கள் முயன்றனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த பிரச்சனையால், பல இடங்களில் வன்முறையும் நடைபெற்றது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம், 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

sabarimala issue... supreme court order Kerala government

இந்த சீராய்வு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பு கூாங்கியது. அதில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம்  பரிந்துரை செய்தது. அதே சமயம், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற நடைமுறை அமலில் இருக்கும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கேரள அரசு கோவிலுக்கு வரும் பெண்களுக்கு எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், சபரிமலை தீர்ப்பில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால் உச்சநீதிமன்றம் தெளிப்படுத்த வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 

sabarimala issue... supreme court order Kerala government

இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து தரிசிக்க வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல ஆந்திராவிலிருந்து வந்த 30 மற்றும் 40 வயதுடைய 2 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நேற்று 12 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சிறுமியின் வயது சான்று பற்றிய சோதனையில் 12 வயது கடந்திருந்தது தெரிய வந்தது.  இதனால் சிறுமியை கீழேயே தங்க வைத்து விட்டு தந்தை உள்ளிட்ட மற்ற உறவினர்களை போலீசார் கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.

sabarimala issue... supreme court order Kerala government

இந்நிலையில், குருவாயூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களை போல சபரிமலைக்கு என கேரள அரசு தனிசட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜனவரி 3-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பந்தளம் அரண்மனை சார்கபாக தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios