பெங்களூருவின் பிரபல பவுரிங் கிளப்பில் 550 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல பவுரிங் கிளப்பில் லாக்கர்களை ஒழுங்குபடுத்துவதற்காக நீண்டகாலமாகத் திறக்கப்படாத லாக்கர்கள் நிர்வாகத்தால் திறக்கப்பட்டன. இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டில்தான் இந்தக் கிளப்பின் லாக்கர்கள் திறக்கப்பட்டன.

நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத லாக்கர்களின் உரிமையாளர்களுக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸுக்கு பதிலளிக்காதவர்களின் லாக்கர்களை கிளப்பின் நிர்வாகிகள் வலுக்கட்டாயமாகத் திறந்தனர். லாக்கர்களின் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் நிர்வாகிகளை  அதிர்ச்சியில் மிரண்டு போனார்கள் .

ஆமாம் பிரபல பிசினஸ் மேன் அவினாஷ் அமர்லால் குக்ரெஜா என்பவருக்குச் சொந்தமான 61, 71, 78 ஆகிய லாக்கர்களில் 550 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கக் கட்டிகள், தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதன்பிறகு  போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பிறகு கிளப்பைப் பார்வையிட்ட பெங்களூரு துணைக் காவல் ஆணையர்,  இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

வருமான வரித் துறையினரும், அமலாக்கத் துறையினரும் கூட இப்பொருட்களை சோதனையிட்டனர்.

 இந்த சோதனையில், 3.90 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், 7.80 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், 650 கிராம் தங்கம், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச், 30 முதல் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பியூஜியோட் வாட்ச் உள்ளிட்ட பல பொருட்கள் சிக்கியுள்ளன.

மேலும், பொருட்களைக் கைப்பற்றிய வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், அவினாஷ் அமர்லால் குக்ரெஜாவின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.