Asianet News TamilAsianet News Tamil

சாலையில் கொட்டிய பணமழை... ரூ 2000, 500 நோட்டுக்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்..!

கீழ்தளத்தில் பணியில் இருந்த காவலாளிகளும் பொறுக்கி எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகிறது. 

rs 2000 500 currency notes shower from kolkata building during dri raid
Author
Kolkata, First Published Nov 21, 2019, 2:36 PM IST

வருமான வரித்துறை ரெய்டுக்கு பயந்து மாடியில் இருந்து சாலையில் வீசப்பட்ட 2000, 500 ருபாய் பணக்கட்டுகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 rs 2000 500 currency notes shower from kolkata building during dri raid

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 6வது மாடியில் இருந்து வீசியெறிந்தனர். கட்டுக் கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.rs 2000 500 currency notes shower from kolkata building during dri raid

Watch: Bundles of money flying from a window. Amidst a raid being conducted by DRI Kolkata Zonal unit, office employees where raid was on throw bundles of money of denomination 500 & 2,000. Shocked public collect notes (1/2) @dna @ZeeNews @ZeeNewsCrime @capt_ivane pic.twitter.com/jVjUmbjw3b

— Pooja Mehta (@pooja_news) 20 November 2019 />

 

மாடியில் இருந்து பணக்கட்டுகள் வந்து விழுவதும், அதனை மக்களும், கீழ்தளத்தில் பணியில் இருந்த காவலாளிகளும் பொறுக்கி எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அடிப்படையில் பணத்தை வீசி எறிந்தவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios