Asianet News TamilAsianet News Tamil

இதுவரை ரூ.5.92 லட்சம் கோடி  பட்டுவாடா…..செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்

reserve bank-D4VBDG
Author
First Published Dec 21, 2016, 11:13 PM IST
இதுவரை ரூ.5.92 லட்சம் கோடி  பட்டுவாடா…..செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்

ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு, ரூ.5.92 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் வங்கிகள் மூலம் மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நவம்பர் 10ல் இருந்து 19ம் தேதி வரை 220 கோடி (எண்ணிக்கை அடிப்படையில்) புதிய 500, 2,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அதேபோல் 204 கோடி( எண்ணிக்கையில்) குறைந்த மதிப்புள்ள 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.  

டிசம்பர் 10ம் தேதி வரை ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.  ரூபாய் நோட்டுகள் ரத்துக்குப் பிறகு டிசம்பர் 19ம் தேதி வரை ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்து 613 கோடி மதிப்பிலான பணம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு இதுவரை ரூ.12.44 லட்சம் கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் வந்துள்ள நிலையில், அதைவிடக் குறைவான மதிப்பில், எண்ணிக்கையில், புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே மக்கள் ஏ.டி.எம்., வங்கிகளில் தங்கள் தேவைக்கு ஏற்றார் போல் பணத்தை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

வங்கிகள் மூலம் வாபஸ் பெறப்பட்ட செல்லாத ரூபாயின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios