மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்ட கேள்விகளுக்கு இந்த விவரங்களை ரயில்வேதுறை வழங்கியுள்ளது.2017-2019 ஆம் ஆண்டுகளில் ரயில்வே வளாகங்களில் 136 பேரும், ஓடும் ரயில்களில் 29 பேரும் என 165 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 44 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், 36 சம்பவங்கள் ரயில்வே வளாகத்திலும், 8 சம்பவங்கள் ஓடும் ரயில்களிலும் நிகழ்ந்துள்ளன. 2018-ம் ஆண்டில் பதிவான 70 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 59 சம்பவங்கள் ரயில்வே வளாகத்திலும், 11 சம்பவங்கள் ஓடும் ரயில்களிலும் நிகழ்ந்துள்ளன.

2017-ம் ஆண்டில் 51 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 41 சம்பவங்கள் ரயில்வே வளாகத்திலும், 10 சம்பவங்கள் ஓடும் ரயில்களிலும் நிகழந்துள்ளன. பாலியல் குற்றங்களைத் தவிர தவிர பெண்களுக்கு எதிராக 1,672 குற்றங்கள் நிழ்ந்துள்ளன. அதில், ரயில்வே வளாகத்தில் 802 குற்றங்களும், ஓடும் ரயில்களில் 870 குற்றங்களும் நிகழ்ந்துள்ளன.இந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வே வளாகங்கள் மற்றும் ரயில்களில் 771 கடத்தல் சம்பவங்களும், 4,718 கொள்ளை சம்பவங்கள், 213 கொலை முயற்சி சம்பவங்கள் மற்றும் 542 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

2017 இல் 51 ஆக இருந்த பாலியல் வழக்குகள் 2019ல் 44 ஆக குறைந்துள்ள நிலையில், 2018ல் 70 என அதிகரித்தது.  2019 இல் மட்டும், ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் மொத்தம் 55,826 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, 201 ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 71,055 ஆக இருந்தது.கடந்த மாதம் மாநிலங்களவையில் ரயில்வேயில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான உதவிக்காக இந்திய ரயில்வேயில் 24 மணி நேரமும் செயல்படும் 182 என்ற பாதுகாப்பு உதவி எண்ணை செயல்படுத்து வருகிறது. பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண்கள் பயணித்ததற்காக  கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 2.50 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.