Asianet News TamilAsianet News Tamil

ரபேல் ஊழல் வழக்கு... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் முறைகேடு நடந்ததாக புகார் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
 

Rafale review petitions Verdict...Supreme Court dismissed
Author
Delhi, First Published Nov 14, 2019, 12:00 PM IST

ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் முறைகேடு நடந்ததாக புகார் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமா் மோடியின் தலையீடு இருந்ததாகவும், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

Rafale review petitions Verdict...Supreme Court dismissed

இதனிடையே, இந்த ஒப்பந்தம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் எம்.எல்.சா்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று டிசம்பா் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 

இதை எதிர்த்து, யஷ்வந்த சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு கடந்த மே மாதம் 10-ம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

Rafale review petitions Verdict...Supreme Court dismissed

6 மாதங்களுக்கு பின்னர் ரபேல் மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான அனைத்து மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Follow Us:
Download App:
  • android
  • ios