புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக காஷ்மீர் மாநில டிஜிபி தில் பக் சிங் தெரிவித்துள்ளார் . இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாட்டிற்கு எதிராக பல்வேறு சாதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து இந்திய ராணுவத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் துணை ராணுவப் படையில் எனப்படும்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சுமார்  2500க்கும் மேற்பட்ட வீரர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி இராணுவ வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர் .  

இதில் 78 வாகனங்களும் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன . இந்த ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட  அவந்திபோரா அருகே உள்ளது போரான்  என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ,  திடீரென எதிரே வந்த ஜீப் ஒன்றில் வெடிகுண்டுகளுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி வெடிக்கச் செய்தனர் .  அதில்  சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வேன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது .   இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர் .  அருகிலிருந்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் .  இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் அடங்குவர் ,  இது சர்வதேச அளவில் மிகப் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது 

இக்கொடூர சம்பவத்திற்குப் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது ,  காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலை சர்வதேச நாடுகள் கண்டித்தன ,  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையான பால் கோட்டைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை குண்டுவீசி தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை முற்றிலுமாக அழித்தது .  இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் முதலாமாண்டு நீங்ழ்ச்சி,  பிப்ரவரி 14 ஆம் தேதி  நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது .  இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய போலீஸ்  மண்டபத்தில் நடைபெற்றது,  தாக்குதலில்  வீரமரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்து அவர் , சமீபகாலமாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் அத்துமீறிய தாக்குதல்  சம்பவங்கள் அதிகரித்துள்ளன .  அதேபோல்  இந்தியாவிற்குள் ஊடுருவ முயலும் தீவிரவாதிகளின் முயற்ச்சியை  பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர்.   புல்வாமா தாக்குதலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் நம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர் என அப்போது அவர் தெரிவித்தார்.