Asianet News TamilAsianet News Tamil

மாணவிக்கு செக்ஸ் மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்... கல்லூரிக்கே வந்து செம்ம காட்டு காட்டிய மாணவிகள்!

Professor of Government College for Girls in Patiala gets beaten up by students for allegedly sending obscene messages to the girls
Professor of Government College for Girls in Patiala
Author
First Published May 7, 2018, 2:10 PM IST


இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு போதையில் இளம் பெண்ணுக்கு தவறாக குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை மாணவி ஒருவர் தனது தாயாருடன் கல்லூரி வளாகத்திலேயே தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் சாமன் லால் தன்னிடம் பயிலும் மாணவிக்கு இரட்டை அர்த்தத்தில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, கல்லூரி முதல்வரிடம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புகார் அளித்தார். பேராசிரியரைக் கல்லூரி முதல்வர் எச்சரித்தார். பேராசிரியர் மாணவியிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, மாணவி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அன்றிரவு மாணவியை செல்பேசியில் தொடர்புகொண்ட பேராசிரியர், ஓடிப் போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், உன் பெற்றோருக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் எனவும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் நேற்று முன் தினம் கல்லூரிக்குச் சென்று பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால் கல்லூரி வளாகத்திலேயே மாணவியும் அவரது தாயாரும் இணைந்து பேராசிரியரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர், அவரை கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றனர். மாணவி தன் தாயாருடன் பேராசிரியரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமன் லால் குடித்துவிட்டு போதையில் பாடம் நடத்துவதாகவும், அக மதிப்பீடு குறித்துப் பேசவேண்டும் என இரவு நேரங்களில் அழைப்பதாகவும் கல்லூரி முதல்வரிடம் பல மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

 

சாமான் லாலை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, ​​அவரது மனைவி, "அவர் மது அருந்தியதால், அந்தப் பெண்ணை தவறாக அழைத்துள்ளார். அது தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக மாணவி அவரை நடத்திய விதம் சரியானது அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios