Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவி செய்யுங்க.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

prime minister narendra modi seeks country people financial help to handle corona threat
Author
Delhi, First Published Mar 28, 2020, 5:26 PM IST

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 900ஐ கடந்துவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக அது பரவவில்லை. அதற்குள்ளாக ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் முனைவோர், மாத ஊதிய ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு எந்தவித சிரமுமின்றி உணவு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதேபோல வருவாய் இழப்பு ஏற்பட்டோரை கருத்தில் கொண்டு நிதி சார்ந்த திட்டங்களும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு திரைப்பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் நிதியுதவி அளித்துவருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி, சச்சின் டெண்டுல்கர், பிவி சிந்து, இர்ஃபான் பதான், யூசுஃப் பதான், தோனி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் அறிவிப்புகளையும் அறிவித்துவருகின்றன. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளவும் சிகிச்சை பணிகளுக்கும் மாநில அரசுகளுக்கும் நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. 

இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பேரிடர் காலங்களில் இதுபோன்ற நிதியுதவிகள் உதவும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வங்கிக்கணக்கு விவரம்:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ)

அக்கவுண்ட் பெயர் - பிஎம் கேர்ஸ்(PM cares)

சேமிப்புக்கணக்கு எண்(அக்கவுண்ட் நம்பர்) - 2121pm20202

ஐ.எஃப்.எஸ்.சி - sbin0000691

மேற்கண்ட வங்கிக்கணக்கில் இந்தியாவில் வாழும் மக்கள் நிதி அளிக்கலாம்.


வெளிநாடு வாழ் இந்தியர்கள்  SWIFT code - Sbininbb104 என்ற கணக்கில் நிதி அளிக்கலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios