பாலியல் வன்கொடுமை வழக்கு: மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா; 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜர்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிற 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்

Prajwal Revanna apologies in fresh video says he will be appear before sit on may 31st smp

முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அவரை கட்சியில் இருந்து நீக்கி மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் தொடர்பான பாலியல் வீடியோ பரவத் தொடங்கிய நிலையில், கர்நாடக மாநில மக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்களித்து விட்டு உடனடியாக அவர் ஜெர்மன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பிரஜ்வல் ரேவண்ணாவை நாடு கடத்தி உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, விசாரணை மேற்கொள்வதற்காக, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

 

 

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பா, அம்மா, தாத்தா, குமாரண்ணா, நாட்டு மக்கள் மற்றும் ஜே.டி.எஸ். தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள அவர்,“வெளிநாட்டில் இருந்தபோது யூடியூப் செய்திகள் மூலம் என் மீதான குற்றச்சாட்டைப் பார்த்தேன். பாலியல் தொடர்பான புகாரில் என்னுடைய பெயரை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறார்கள்.” என கூறியுள்ளார். மேலும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு வருகிற 31ஆம் தேதி ஆஜராக உள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் பலி: மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்து!

முன்னதாக, ஆபாச வீடியோக்கள் தொடர்பாக முதன்முறையாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா, தான் பெங்களூருவில் இல்லாததால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும், இந்த தகவலை தனது வழக்கறிஞர் மூலம் சி.ஐ.டி.க்கு தெரிவித்துள்ளதாகவும், விரைவில் உண்மை வெல்லும் எனவும் பதிவிட்டிருந்தார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் துன்புறுத்தல்களில் அரசு அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு பெண்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவரது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை மீறுதல் தொடர்பான குற்றங்களுக்காக ஐபிசி 354A, 354D, 506, மற்றும் 509 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios