கேரளாவில் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு சுமார் 11 மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பொதுமக்களும் உணவின்றி, இருக்க இடமின்றி தவித்தனர். இதனையடுத்து கேரளாவிற்கு நாடு முழுவதும் பல்வேறு உதவிகள் குவிந்தது.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.15 லட்சமும், நடிகர் கமல் ரூ.25 லட்சமும் கொடுத்து உள்ளனர். இதற்கு முன்னதாக நடிகர் விக்ரம் கொடுத்த 30 லட்சம்  மற்றும் விஜய் 70 லட்சம் நிதி உதவி செய்து முதலிடத்தை பிடித்திருந்த நிலையில் தனது கவர்ச்சி  நடிப்பால் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே ஒரு படத்தில் நடித்த மொத்த பணத்தையும் கேரளாவிற்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

கவர்ச்சிக்கு மட்டுமல்ல சர்ச்சைகளுக்கும்கூட பெயர் போன நடிகை பூனம் பாண்டே,  இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்பார். முக்கால் நிர்வாணப் படங்களை  தெறிக்கவிடுவார் . ஒருமுறை ஒரு படி மேலேயே போய் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை ரசிகர்கள் பாரக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் தனது பெயரில் புது அப்ளிகேஷனையே  வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியவர்.

தான் பரபரப்பாக அறியப்படவேண்டும் எனும் காரணத்திற்காக சர்ச்சைகளை தானே உருவாக்குவதாகவும்கூட தடாலடியாகக் கூறுபவர் பூனம்.இப்படியாக அறியப்படும் பூனம் பாண்டே, தற்போது செய்துள்ள செயல் தற்போது அவருக்கு வேறொரு முகத்தை ரசிகர்களுக்கு அறியத் தந்திருக்கிறது எனலாம்.

  சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் கேரளாவுக்கு பலரும் நிவாரண நிதிகளை வழங்கிவருகின்றனர். பல சினிமா பிரபலங்களும்கூட நிவாரணத் தொகையை வழங்கிவருகின்றனர். தற்போது இதில் பூனமும் இணைந்துள்ளார். அந்தவகையில் தற்போது தெலுங்கில் தான் நடித்துவரும் லேடி கப்பார் சிங் படத்தில் தனக்குக் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் கேரள நிவாரணமாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் பூனம். இதனால் அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.