Asianet News TamilAsianet News Tamil

"ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி" 4 நாடுகள் சுற்றுப்பயணம் தொடங்கினார்...

PM Modi four nation trip Live Narendra Modi arrives in Berlin
PM’s four-nation trip Live: Narendra Modi arrives in Berlin
Author
First Published May 29, 2017, 8:39 PM IST


நாட்டின் பொருளாதார மேம்பாட்டு, முதலீட்டை ஈர்த்தல் ஆகியவற்றுக்காக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலாவது ஜெர்மனி நாட்டுக்கு சென்று அடைந்தார்.  அங்கு அவருக்கு சிவப்பு கம்பள உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மனி சென்று அடைந்துள்ள பிரதமர் மோடி ஜெர்மனி தலைவர் பிராங் வால்டரையும், அதிபர் ஏஞ்சலா மார்கல்லையும் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும், பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், நகர்ப்புற கட்டமைப்பு, ரயில்வே, விமான போக்குவரத்து, சுத்தமான எரிசக்தி ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், பெர்லின் நகரில் பிரதமர் மோடியும், அந்நாட்டு பிரதமர் மெர்கலும், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக தலைவர்களுடன் பேச்சு நடத்தி, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்க உறவுகளை வலிமைப்படுத்தி, முதலீட்டை ஈர்க்க உள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் பயணத்தை முடித்து கொண்டு இன்று பிரதமர் மோடி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மரினோ ராஜோயை சந்தித்து பேசுகிறார். மேலும் அந்த நாட்டு மன்னர் 6-ம் பிலிப்பையும் சந்தித்து பேச உள்ளார்.

ஸ்பெயின் தொழிலதிபர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயின் செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

அதனை தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்திய-ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்கிறார்.

ஜூன் 2-ந் தேதி பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்கிறார்.

Reached Germany. I am sure this visit will lead to beneficial outcomes & deepen India-Germany friendship. pic.twitter.com/RdYLWUYeMn

— Narendra Modi (@narendramodi) May 29, 2017

அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மெக்ரோனையும் சந்தித்து பேசுகிறார். 6 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு ஜூன் 3-ந் தேதி நாடு திரும்புகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios