Asianet News TamilAsianet News Tamil

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்... பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இரவு 10.07 மணிக்கு இங்கிலாந்து நாட்டின் 2 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

PM Modi congratulate...PSLV-C42 launch
Author
Chennai, First Published Sep 17, 2018, 2:18 PM IST

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இரவு 10.07 மணிக்கு இங்கிலாந்து நாட்டின் 2 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. PM Modi congratulate...PSLV-C42 launch

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்துவதற்கான 32 மணி நேரம் 37 நிமிடங்களுக்கான கவுண்ட் டவுன் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு, மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பயன்பாட்டுக்காக நோவாசார் மற்றும் எஸ் 1-4 என்ற இரு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று இரவு இரவு 10.07 மணி்க்கு பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. PM Modi congratulate...PSLV-C42 launch

விண்ணில் செலுத்தப்பட்ட 17 நிமிடம் 44 வினாடிகளில் இரு செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 583 கி.மீ உயரத்தில் புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. இரு செயற்கைக்கோள்களும் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும் இஸ்ரோ தலைவர் சிவன், சக விஞ்ஞானிகளுடன் கை குலுக்கி மகிழ்ச்சிய வெளிப்படுத்தினார். PM Modi congratulate...PSLV-C42 launch

பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நோவாசார் செயற்கைக்கோள் காப்பாடு காடுகளை அளவை கண்காணித்தல், புவி ஆய்வு, வெள்ளம் மற்றும் பேரிடர் கண்காணிப்பு, கப்பல், கடல்வவி போக்குவரத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில்ஈடுபடுகிறது. அதேபோல எஸ்-1-4 செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகர்புற மேலாண்மை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுகிறது. இந்த இரு செயற்கைக்கோள்களும் படங்களை துல்லியமாக கண்காணிக்கும்.நோவாசார் செயற்கைக்கோள் 445 கிலோஎடையும், எஸ்1-4 செயற்கைக்கோள் 444 கிலோ எடையும் கொண்டதாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios