இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக  பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

கொரோனா நோய் காரணமாக மக்கள் இடையே பீதி பரவி வருகிறது. நோய் பரவாமல் தடுக்க ஏறக்குறைய 20- க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள், மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மக்கள் செய்ய வேண்டியவை என்ன ? செய்யக்கூடாதவை என்ன ? மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது எப்படி உள்ளிட்டவைகள் குறித்து மோடி விளக்கி வருகிறார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில் ;- இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக  பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.