பெண் ஒருவருக்கு கவர்ச்சியாக உடை அணிவித்து, பேருந்தின் கண்டக்டராக நியமிக்கப்படும் பேருந்தில் பயணம் செய்ய இளைஞர்களும், வயதானவர்களும்
க்யூவில் நிற்பது போன்று தமிழ் சினிமாவில் காட்சி ஒன்று மைக்கப்பட்டிருக்கும். இதேபோன்று, கேரளாவில் உள்ள ஆம்னி பேருந்துகளில் கவர்ச்சி நடிகைகளின் படம் ஒட்டப்பட்டு இளைஞர்களை இழுக்கும் முயற்சியில் தொழிலதிபர் அம்பாடி என்பவர் இறங்கியுள்ளார். இதற்காக தனது சொகுசு பேருந்துகளில் கவர்ச்சி நடிகைகளின் படங்கள் ஒட்டியுள்ளார்.

ஆம்னி பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம், கேரளாவில் இயங்கி வரும் சொகுசு பேருந்துகளில் கவர்ச்சி நடிகைகளின் படங்கள் வரையப்பட்டுள்ளது. கவர்ச்சி நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்ட சொகுசு பேருந்துகள், அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக சொகுசு பேருந்துகளில் கடவுள் படங்கள், இயற்கை எழில் கொஞ்சும் படங்கள், குழந்தை அல்லது நடிகர் - நடிகைகளின் படங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், கேரளா சொகுசு பேருந்துகளில் கவர்ச்சி நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கேரள சொகுசு பேருந்துகளில், உலக அளவில் செக்ஸ் பாம் என்று வர்ணிக்கப்படும் மியா கலிபா, இந்தியாவின் கவர்ச்சி புயல் சன்னி லியோன், அமெரிக்காவின் கவர்ச்சி கன்னி ஆவா ஆடம்ஸ், கவர்ச்சி பட நாயகன் ஜானி சின்ஸ் ஆகியோரின் படங்கள் சொகுசு பேருந்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சொகுசு பேருந்துகள், அம்பாடி என்பவருக்கு சொந்தமானது.

கவர்ச்சி நடிகைகளின் போட்டோக்கள் இடம் பெற்றிருப்பதால், சொகுசு பேருந்துகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இந்த பேருந்துகளில் செல்ல
இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், முன்பதிவு இல்லாமல் பேருந்தில் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும் இந்த பேருந்தில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.