Asianet News TamilAsianet News Tamil

பால் கறக்கும் கறவை மாடு நான்... எட்டி உதைக்கும் எருமை மாடு ஜெகன்மோகன்... சந்திரபாபு நாயுடு பேச்சால் வெடித்தது சர்ச்சை..!

பால் கறக்கும் கறவை மாடான என்னை புறக்கணித்துவிட்டு எட்டி உதைக்கும் எருமை மாடான ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என ஆவேசமாக பேசினார். இந்த 2 மாத ஆட்சியில் மக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்துள்ளனர்.

People chose bison jagan mohan reddy...left cow, says Chandrababu Naidu
Author
Andhra Pradesh, First Published Aug 8, 2019, 2:15 PM IST

பால் கறக்கும் கறவை மாடான என்னை புறக்கணித்துவிட்டு எட்டி உதைக்கும் எருமை மாடான ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. People chose bison jagan mohan reddy...left cow, says Chandrababu Naidu

ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, தன் மாநிலத்துக்காகப் பல்வேறு சிறந்த திட்டங்களைக் கொண்டுவந்து, மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார். ஆனால், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. People chose bison jagan mohan reddy...left cow, says Chandrababu Naidu

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருவதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். நேற்று குண்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி எப்படி தோற்றது என்றே தெரியவில்லை. வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளோம். அந்த அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 People chose bison jagan mohan reddy...left cow, says Chandrababu Naidu

பால் கறக்கும் கறவை மாடான என்னை புறக்கணித்துவிட்டு எட்டி உதைக்கும் எருமை மாடான ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என ஆவேசமாக பேசினார். இந்த 2 மாத ஆட்சியில் மக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்துள்ளனர். மணல் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் ஆட்சியை பிடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம் இல்லை. நீங்கள் துன்பப்படுவது ரொம்ப வேதனையாக உள்ளது என  சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios