Asianet News TamilAsianet News Tamil

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை... டாக்டர்கள் போராடிய பதறவைக்கும் வீடியோ!

மருத்துவம் எனும் உயிர் காக்கும் பணியை செய்திட தகுந்த சூழலை அமைத்து கொடுப்பது தான் ஒரு அரசின் கடமை. ஆனால் ஓடிசா வில் உள்ள மாயூர் எனும் பகுதியில் அமைந்திருக்கும்  ரூரன் பிளாக் மருத்துவமனையில் நிலைமையே வேறாக இருக்கிறது. 

மருத்துவம் எனும் உயிர் காக்கும் பணியை செய்திட தகுந்த சூழலை அமைத்து கொடுப்பது தான் ஒரு அரசின் கடமை. ஆனால் ஓடிசா வில் உள்ள மாயூர் எனும் பகுதியில் அமைந்திருக்கும்  ரூரன் பிளாக் மருத்துவமனையில் நிலைமையே வேறாக இருக்கிறது. தினம் 200 நோயாளிகள் வரும் அந்த மருத்துவமனையில் போதிய மின்வசதி இல்லாத காரணத்தால், மின் தடையின் போது சிகிச்சை அளித்திட அவதிப்படுகின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவம் பார்த்திட முதலில் தகுந்த சூழல் வேண்டும் . சரியான வெளிச்சம் இருந்தால் தான் என்ன மருந்து கொடுக்கிறோம், எந்த அளவு மருந்து எடுக்கிறோம் என்பதை கூட மருத்துவரால் உணர முடியும். ஆனால் ஒடிசாவில் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் மருத்துவமனையே இருட்டில் மூழ்கிவிடுவதால், நோயாளிகளை மெழுகுவர்த்திரி , டார்ச் லைட் போன்றவற்றின் வெளிச்சத்தில் தான் கவனித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த அவல நிலையின் வீடியோ காட்சி தான் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

இருட்டில் மருத்துவம் அளிப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒரு செயல். ஆனால் சூழ்நிலையின் காரணமாக அதை தான் செய்துவருகின்றனர் அப்பகுதி மருத்துவர்கள்.

நோயாளி ஒருவர் வேதனையுடன் படுத்திருக்கும் போது, உறவினர்கள் சுற்றி நிற்கையில் டார்ச் லைட் மற்றும் மெழுகுத்திரி வெளிச்சத்தில் , இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர் மருத்துவம் பார்க்கும் வீடியோவினை வேதனையுடன் இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர் பாதிக்கப்பட்டோர்.

ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது பல உபகரணங்களும் உபயோகிக்க வேண்டி இருக்கும். அதற்கு மின்சாரம் அவசியம். ஆனால் போதிய மின்வசதி கூட இல்லாத இந்த நிலையில் உயிர்களை காப்பாற்றிட, தினம் தினம் நாங்கள் போராடி வருகிறோம் என வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் அப்பகுதி மருத்துவர் ஒருவர்.

Video Top Stories