Asianet News TamilAsianet News Tamil

10 ஆயிரம் அபராதமாம்… சரியா குறிப்பிடுங்க… பான்கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை ...

பான் அல்லது ஆதார் எண்ணை தவறாக குறிப்பிட்டால் வருமான வரித்துறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் ஆதார் அல்லது பான் எண்ணை குறிப்பிடும் போது கவனமாக சரியா குறிப்பிடுங்க.
 

pan card warning by income tax dept
Author
Delhi, First Published Dec 7, 2019, 12:17 AM IST

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த பான் (நிரந்த கணக்கு எண்) கார்டு  தற்போது வங்கியில் கணக்கு தொடங்க, விலையுயர்ந்த பொருட்களை வாங்க என பல்வேறு விஷயங்களுக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பான் கார்டு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பான் கார்டை வருமான வரித்துறை வழங்கி வருகிறது. 
அதேசமயம் பான் எண் இல்லாதவர்கள் ஆதார் எண்ணை குறிப்பிடலாம் என மத்திய அரசு அறிவித்தது. 

pan card warning by income tax dept

மேலும், பான் கார்டு இல்லாதோர் ஆதார் எண் குறிப்பிட்டு வரிக்கணக்கு தாக்கல் செய்தால், அதனை தானாகவே பான் கார்டுக்கு விண்ணப்பமாக ஏற்று சம்பந்தப்பட்ட நபருக்கு வருமான வரித்துறை பான் கார்டு வழங்கி விடும். தனிநபர்கள் பான் அல்லது ஆதார் எண்ணை தவறாக குறிப்பிட்டால் வருமான வரித்துறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் அபாயமும் உள்ளது.

pan card warning by income tax dept
வருமான வரிச்சட்டம் பிரிவு 139(5)(சி)ன் கீழ் குறிப்பிட்டப்பட்டுள்ள எந்தவொரு ஆவணத்திலும் தனது பான் அல்லது ஆதாரை குறிப்பிடப் வேண்டிய ஒருவர், தவறான பான் அல்லது ஆதாரை குறிப்பிட்டால் சம்பந்தப்பட்டநபருக்கு வருவாய் துறையின் மதிப்பீட்டு அதிகாரி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் அபாயம் உள்ளது. 

pan card warning by income tax dept

அதற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 27பி-ல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தவறாக குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதற்காக 2019 மத்திய பட்ஜெட்டில் இந்த சட்டப்பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்தது.  ஆகையால் இனி பான் அல்லது ஆதார் குறிப்பிடும்போது சரியாக குறிப்பிடுங்க. இல்லைன்னா ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டியது இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios