Asianet News TamilAsianet News Tamil

தமிழக விமானி அபிநந்தன் நாளை விடுதலை... பாக்., பிரதமர் அறிவிப்பு

பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 
 

Pakistani PM announces release Abhinandan
Author
India, First Published Feb 28, 2019, 4:49 PM IST

பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

 Pakistani PM announces release Abhinandan

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள விமானி அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து அபிநந்தனை விடுவிக்க சில நிபந்தனைகளை விதிக்க பாகிஸ்தான் முயலுவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெகமுத் குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.Pakistani PM announces release Abhinandan

இந்திய விமானியை திருப்பி ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அதேசமயம் மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என குரேஷி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அபிநந்தனை விடுவிப்பதற்காக வேறு எந்த நிபந்தனையையும் ஏற்க தயாரில்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிபந்தனை ஏதும் இன்றி அபிநந்தனை விடுவிக்க வேண்டும், அதுவும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். 

Pakistani PM announces release Abhinandan

பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன் தராது. அமைதி ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அபிநந்தனை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios