Asianet News TamilAsianet News Tamil

எல்லையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி... இந்திய ராணுவம் பகீர்..!

காஷ்மீர் எல்லையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Pakistan attack... indian border alert
Author
Jammu and Kashmir, First Published Aug 16, 2019, 4:15 PM IST

காஷ்மீர் எல்லையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். Pakistan attack... indian border alert

இந்நிலையில், கடந்த மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவ தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால், இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். Pakistan attack... indian border alert

இதனிடையே, காஷ்மீர் குறித்து ஐ.நா. அவையில் இன்று இரவு விவாதம் நடைபெறும் நிலையில், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் இந்த சதி வேலையை ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ராணுவம் சாதுர்யமாக செயல்பட்டு, பாகிஸ்தான் அத்துமீறுவதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இனிமேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios