எங்கெல்லாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது அங்கெல்லாம் அதை தாக்கி அழிக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார் அதேபோல் இந்தியா- சீனா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்திய ராணுவ தளபதியாக இருந்த  பிபின் ராவத் முப்படைகளின் தளபதி யார் பதவி உயர்வு பெற்றுள்ளார், இந்நிலையில் இந்திய ராணுவத்தில் தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பொறுப்பேற்றுள்ளார், 

முதலில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பேசிய அவர் ,  எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாக்கிஸ்தானுக்கு இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் வலுவான எச்சரிக்கையாக இருக்கும் என்றார் ,  அதாவது கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய  வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்  நடத்தி தாக்கி அழித்தனர்.  தங்களால்  எல்லை தாண்டி வந்து தீவிரவாதிகளை அழிக்க முடியும் என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு   இந்தியா உணர்த்தி இருக்கிறது என்றார்.  எதிர்காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் பாகிஸ்தான் ஒரு முறைக்கு நூறு முறை  சிந்திக்க வேண்டிய அவசியத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது என்றார் . 

இந்த தாக்குதலின்போது தீவிரவாத முகாம்களையும் தீவிரவாதிகளையும்  அழிக்க இந்தியா அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை என்றார் .  தீவிரவாதம் எங்கிருந்து வருகிறதோ அங்கே  முன்கூட்டியே  அறிந்து  தாக்கி அழிக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது என்றார்.  இந்தியா பாகிஸ்தான் எல்லையை போலவே சீனா எல்லையிலும் பாதுகாப்பையும் வலுப்படுத்தப்படும் என்ற அவர்,  எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என கூறினார்.