வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள ஹரிதூவாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் ஒரு கார் அடித்து செல்லப்பட்டது.

அந்த காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அங்கு தற்போது வரை 10,000-க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். 

பலரது விடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதேபோல் குஜராத்திலும் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நீரம்பி கழிவு நீருடன் மழை நீர் பாய்கிறது. 

இங்கு மேலும் மழை நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.