Asianet News TamilAsianet News Tamil

புதிய ரூ.50, ரூ.200 நோட்டுகள் வெளியானது…ஏ.டி.எம்.களில் இப்போதைக்கு கிடைக்காது ஏன் தெரியுமா?...

No new 50 and 200 notes in atm
No new 50 and 200 notes in atm
Author
First Published Aug 26, 2017, 7:21 AM IST


வௌிர் மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டையும், புளோரோசன்ட் நிறத்தில் 50 ரூபாய் நோட்டையும் ரிசர்வ் வங்கி  மக்கள் புழக்கத்துக்கு நேற்று வௌியிட்டது.

கருப்பு பணம், ஊழலை ஒழிக்கும் வகைில்கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டு தடையைத் தொடர்ந்து புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டன.

புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதால், 50, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. அதன் பிறகும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறையவில்லை.

இதனால் புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கை நேற்று முன்தினம் ரிசரவ் வங்கி வெளியிட்டது.

No new 50 and 200 notes in atm

இந்நிலையில் புதிய 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி நேற்று வௌியிட்டது. இதில் புதிய ரூ.200 நோட்டுகள் பிரகாசமான மஞ்சள் நிறத்திலும், 50 ரூபாய் நோட்டுகள் புளோர சென்ட் நிறத்திலும் உள்ளன.

இதில் புதிய 200 ரூபாய் நோட்டிந் நீளம் 66 எம்.எம். அகலத்திலும், 146 எம்.எம். நீளத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில் சாஞ்சி ஸ்தூபி படம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், புதிய கவர்னர் உர்ஜித் படேலின் கையொப்பம், நாட்டின் கலாச்சாரத்தை குறிக்கும் படங்கள், நடுவில் மகாத்மா காந்தியின் உருவப்படம், தேவநாகிரி எழுத்தில் எண் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது.

புதிய 50 ரூபாய் நோட்டுகள் புளுரோசென்ட் நிறத்தில் 66எம்.எம். அகலத்திலும், 135எம்.எம். நீளத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டில் ஹம்பிகோயில் மற்றும் தேர்சின்னம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரும்பாலான வங்கிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்ததால், இந்த புதிய ரூ.50, ரூ.200 நோட்டுகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிசேசமயம், ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலகங்களில் மக்கள் சென்று புதிய ரூபாய் நோட்டுகளை ஆர்வத்துடன் வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.

ஆனால், இந்த புதிய ரூ.200, ரூ.50 நோட்டுகள் முதலில் வங்கிகளில் மட்டுமே கிடைக்கும். ஏ.டி.எம். எந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டியது இருப்பதால், அங்கு வைக்கப்படாது. மேலும், நேற்று வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பெரும்பாலான வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சென்று சேரவில்ைல. அடுத்த வாரத்தில் இருந்து இந்த ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனார்ட் சீரிஸ் தொழில்நுட்பம்....

புதிய ரூ.200, ரூ.50 நோட்டுகளில் உள்ள எண்களின் அளவுகள் ஏறு வரிசையில் அமைக்கப்பட்டு இருக்கும். பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் ரெனார்ட் சீரிஸ் முறையில் எண்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அது பாதுகாப்பு தன்மை நிறைந்ததாக இருக்கும்.

அதாவது, ரூபாய் நோட்டின் சீரியல் எண் தொடக்கத்தில் இருக்கும் எண்ணைக் காட்டிலும், அடுத்த எண் 2 மடங்கு பெரிதாக அல்லது அந்த எண்ணைக் காட்டிலும் மதிப்பில் சிறிதாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நாட்டின் ராணுவ பொறியாளர் சார்லஸ் ரெனார்டு என்பவர் பரிந்துரை செய்ததாகும். அதனால் ரெனார்ட் சீரியஸ் என்று அழைக்கப்படுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios