கடந்த சில நாட்களாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், அந்த நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படுமா என பொது மக்களிடையே பீதி நிலவுகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 நாட்களாக பொது வெளியிலும் சரி, வங்கிகளிலும் சரி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அவெகுவாக குறைந்து காணப்படுகிறது. ஏடிஎம்களில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே கிடைக்கிறது.

வங்கிகளில் 2000  ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் 2000 ரூபாய் நோட்டுக்களை திடீரென செல்லாது என அறிவித்துவிடுவார்களோ என பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இது குறித்து சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது என தெரிவித்தார்..இதனிடையே ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.இதனால், வங்கிகளுக்கு  கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்..இது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது என்றும்,  பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழுவில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதிநிதியை, இடம்பெற செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.