Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சிமேல் அதிர்ச்சி... 157 பேர்: 16 இடங்கள் இந்தியாவில் தங்கி விரட்டி விரட்டி கொரோனா பரப்பிய வெளிநாட்டினர்

 94 பேர் இந்தோனேசியா, 13 பேர் கஜகஸ்தான், 9 பேர் பங்களாதேஷ், 8 பேர் மலேசியா, 7 பேர் அல்ஜீரியா மற்றும் இத்தாலி, துனிசியா,  பெல்ஜியம் தலா ஒருவர் என மொத்தம் 138 பேர் வெளிநாட்டினரும் எஞ்சிய 19 பேர் இந்தியர்கள்

Nizamuddin congregation participants stayed in 16
Author
Delhi, First Published Apr 1, 2020, 11:55 AM IST

இந்தியா முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வெளியேறி உள்ளனர் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிஹ் ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டுள்ளனர். Nizamuddin congregation participants stayed in 16

அந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதக்கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 157 பேர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Nizamuddin congregation participants stayed in 16

நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 157 பேர் டெல்லியின் தென்கிழக்கு, வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 மசூதிகளில் தங்கியுள்ளனர். அவ்வாறு தங்கியவர்களில் 94 பேர் இந்தோனேசியா, 13 பேர் கஜகஸ்தான், 9 பேர் பங்களாதேஷ், 8 பேர் மலேசியா, 7 பேர் அல்ஜீரியா மற்றும் இத்தாலி, துனிசியா,  பெல்ஜியம் தலா ஒருவர் என மொத்தம் 138 பேர் வெளிநாட்டினரும் எஞ்சிய 19 பேர் இந்தியர்கள் ஆவர்.

Nizamuddin congregation participants stayed in 16

இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios