டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர்  செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்தனர். 

‘’ ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 36 மணி நேரத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்படும்.  ஜன் தன் வங்கி கணக்குகளில் வைத்திருக்கும் பெ ண்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் தலா 500 ரூபாய் வழங்கப்படும். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 5 கோடி பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

 மருத்துவர்கள் நர்ஸ் போன்ற மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சம் காப்பி செய்யப்படும். நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த மூன்று மாதத்திற்கு தலா ஒரு கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும். சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 முதல் கட்டமாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

 சுய உதவிக் குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். தொழிலாளர்கள் பிஎஃப் படத்தில் 75 சதவீதம் அல்லது மூன்று மாத ஊதியம் இவற்றில் எது குறைவோ அதை பெற்றுக் கொள்ளலாம்.

யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 80 கோடி மக்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும். சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 வீதம் முதல் கட்டமாக அவர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். 1.70 லட்சம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.