கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்களின் சோகம் மறையாத நிலையில் குஜராத் மாநிலம், சூரத் நகரி்ல் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏறப்படுத்தி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரததுக்கு ஆளான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதேபோன்று உத்தரபிரதேசம் உன்னாவ் நகரில் சிறுமி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ. உள்ளிட் சிலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. தற்போது பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கதுவா, உன்னாவ் சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்கும் முன் குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி குறைந்தது 8 நாட்கள் பாலியல் வன்கொடுமை அனுபவித்து, உயிருக்கு போராடி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறுமி யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியின் உடலை வாங்கவும் யாரும் முன் வரவில்லை. இதனை அடுத்து காணாமல் போன சிறுமிகளின் புகார்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது பற்றிய விவரங்களும் இன்னும் தெரியவில்லை.

இது குறித்து சூரத் நகர் போலீஸ் ஆய்வாளர் பி.கே.ஜலாலா கூறுகையில், கடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு 8 நாட்கள் ஆகியும் இதுவரை குடும்பத்தினர் யாரும் தேடி வரவில்லை. சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு வீசி சென்றிருக்கலாம். இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு போதை மருந்து ஏதும் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும், சிறுமியின் குடும்பத்தினர் தொடர்பாகவும் யாரேனும் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக கூறினார்.