Asianet News TamilAsianet News Tamil

அடிசக்க... இந்தியாவின் பொருளாதாரம் இத்தனை கோடியா...!! அதிரடியாக முடிவு செய்த மோடி...!!

தொழில் துறைக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசும் செயல்படுகிறது என்றார்,  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் நிறுவனங்களுக்கான வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றார் .

next five year Indian economic development will to be near 5 lakh crore dollar , - India have target , modi says
Author
Delhi, First Published Jan 7, 2020, 3:00 PM IST

அடுத்த 5 ஆண்டுகளில் ஐந்து லட்சம் கோடி டாலர்களை கடந்த பொருளாதார நாடக  இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதே தம் அரசின் நோக்கம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .  5 லட்சம் கோடி என்பது முதல் கட்டம் தான் என்று தெரிவித்த அவர் அதையும் தாண்டி பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .  எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி  அபரிதமாக இருக்கும் என்றும் ,  வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலும் ஒழித்து  5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறிதான  பாஜக ஆட்சிக்கு வந்தது.

next five year Indian economic development will to be near 5 lakh crore dollar , - India have target , modi says 

இந்நிலையில் முதல் ஐந்து ஆண்டுகளை நிறைவு  செய்த இரண்டாவது ஐந்தாண்டை தொடர்கியுள்ள  பாஜக  ஆட்சியில்   இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது .  தொழிற்சாலைகள் மூடல் ,  வேலையில்லாத் திண்டாட்டம் என பல்வேறு சிக்கல்களை நாடு சந்தித்து வருகிறது . இந்நிலையில் நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்களை அழைத்து பிரதமர் டெல்லியில்  ஆலோசனை நடத்தியுள்ளார் .  இந்நிலையில் மோட்டார் பம்புகள் தயாரிப்பில் முன்னோடியாக திகழும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின்  100 ஆம் ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நடைபெற்றது .  அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.   அப்போது பேசிய அவர் ,  தொழில் துறைக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசும் செயல்படுகிறது என்றார்,  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் நிறுவனங்களுக்கான வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றார் .  எந்த காரணத்திற்காகவும் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைய தேவையில்லை ,  சீரிய வளர்ச்சியுடன் புதிய சக்தியுடன் முன்னேறி செல்லுமாறு கேட்டுக் கொண்டார் . 

next five year Indian economic development will to be near 5 lakh crore dollar , - India have target , modi says

தொழில் விரிவாக்க நடவடிக்கைக்காக நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் மத்தியஅரசு தோளோடு தோள் கொடுக்கும் என்றார் .  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற அவர், இது  முதற்கட்டம் தான் அதையும் தாண்டி பெரிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் .  வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறை இருக்கும் இடையே நெருக்கமும் வரி செலுத்துவதில் வெளிப்படைத் தன்மையையும்  உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.  அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா தொழில் முனைவோருக்கான காலமாக  இருக்கும் என்று கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios