துணி கடை, நகைக்கடை, ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் வேலை பார்ப்பவர்கள் நின்று கொண்டே வேலை பார்த்து வருகின்றனர். இதில்
பெண்கள்-ஆண்கள் அடக்கம். 

காலை 9 அல்லது 10 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர்கள் இரவு 7 மணி வரை நின்று கொண்டே வேலை பார்த்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள்
இல்லாத சமயங்களில் கூட அவர்கள் நின்று கொண்டேதான் இருக்க வேண்டும். 

சுமார் 12 மணி நேரம் நின்று கொண்டே இருந்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள்
ஏற்படுகின்றன.

இந்த நிலையில், நின்று கொண்டு வேலை பார்ப்பதற்கு பதிலாக அமர்ந்து கொண்டு வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் 2013 ஆம் ஆண்டு கேரளாவில் போராட்டம் நடத்தப்பட்டது. 

கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்கள், சட்டப்படி உட்கார்ந்து கொண்டு வேலை செய்ய உரிமை உள்ளது. இந்த விதி, ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிறுவனங்களின் சட்டத்தை திருத்துவதற்காக மாநில அரசு முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டால், கேரள நகை மற்றும் ஜவுளி கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உட்கார்ந்து கொண்டே வேலை செய்ய முடியும்.