ஃபிட்னஸ் சேலஞ் விடுப்பது தான் இப்போது இந்தியாவிக் புதிய ட்ரெண்ட். பிரபல கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி, பாரத பிரதமர் மோடிக்கு டிவிட்டர் பிட்னஸ் சேலஞ் விடுத்தது அனைவரும் அறிந்ததே.

அந்த சேலஞ்சை ஏற்று மோடியும் யோகாசங்கள் போன்ற உடற்பயிற்சியை மேற்கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த உடற்பயிற்சி வீடியோ தான், சமீபத்தில் இணையத்தில் மிகவும் வைரலான வீடியோவாகி இருக்கிறது.

மோடியின் ஃபிட்னஸ் வீடியோ எவ்வளவு தூரம் பிரபலமானதோ, அவ்வளவு தூரம் கேலிக்கும் ஆளானது. அவரது ஃபிட்னஸ் சேலஞ்சை கலாய்த்து வந்த மீம்ஸ்கள் ஏராளம். பொதுவாக இது போன்ற ஃபிட்னஸ் சேலஞ் வீடியோக்கள் செல்ஃபீ வீடியோவாக தான் இருக்கும். அல்லது மொபைல் கேமராவில் யாராவது வீடியோ எடுத்து கொடுப்பார்கள்.

ஆனால் மோடியின் வீடியோ மிகவும் பார்த்து, பார்த்து தொழில்நுட்ப கலைஞர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது. எடிட்டிங் கூட செய்யப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ எடுக்க உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்ப சாதங்கள் கூட, வீடியோவின் ஒரு சிறு பாகத்தில் தெரிகிறது. இதனால் ”ஒரு ஃபிட்னஸ் சேலஞ்சை கூட இவ்வளவு நேர்த்தியாக வீடியோ செய்திருக்கிறாரே மோடி…!” என்று மோடியை பாராட்டி இருக்கின்றனர் மீம்ஸ் கிரியேர்ஸ். இதுக்கு பேர் தான் வஞ்சப்புகழ்ச்சியோ?