Asianet News TamilAsianet News Tamil

மூன்று படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி மோடி அதிரடி... இனி "சிடிஎஸ்" தான் எல்லாம்!!

ராணுவம் என்றாலே அதிலும் இந்திய ராணுவம் என்றால் காலாட்படை கப்பற்படை விமானப்படை என மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டதாகும் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியான தளபதிகள் இணைக்கப்பட்டு இருப்பார்கள். 

Modi Action, Commander-in-Chief with all three forces
Author
Delhi, First Published Aug 15, 2019, 1:42 PM IST

ராணுவம் என்றாலே அதிலும் இந்திய ராணுவம் என்றால் காலாட்படை கப்பற்படை விமானப்படை என மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டதாகும் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியான தளபதிகள் இணைக்கப்பட்டு இருப்பார்கள். காக்கி நிறம் ராணுவத்தினருக்கும், வெள்ளை நிறம் கப்பற்படையின் இருக்கும் நீலநிறம் விமான படையினருக்கும் சீருடையாக வழங்கப்பட்டிருக்கும், இந்த மூன்று படைகளின் தனித்தனி தளபதிகளுக்கும் ஒரே மாதிரியான அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது.

Modi Action, Commander-in-Chief with all three forces

ஆனால், இந்திய சுதந்திர வரலாற்றில் முதன்முறையாக அதை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்து அறிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி அதன்படி இந்தியாவின் ராணுவம் விமானம் கப்பல் ஆகிய முப்படைகளுக்கும் இனி ஒரே தளபதி தான் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் இனி சிடிஎஸ் என அழைக்கப்படுவார்.

சிடிஎஸ் என்றால் chief of defence staff என்று அர்த்தமாகும். இனி அந்த பதவியை வகிப்பவர் தான் இந்தியாவின் ராணுவம் தொடர்பான அனைத்துப் படைகளையும்  நிர்வகிப்பார். சுதந்திர தினவிழாவில் டெல்லியில் செங்கோட்டை வளாகத்தில் கொடி ஏற்றிவைத்து வீர உரையாற்றிய மோடி இந்த தகவலை தெரிவித்தார்.

Modi Action, Commander-in-Chief with all three forces

இதன்மூலம் நமது நாட்டின் பாதுகாப்பு படைகள் மேலும் வலுவடையும் ஒரே தலைமையின் கீழ் ஒரே சிந்தனையோடு, உத்வேகத்தோடு செயல்பட இது வாய்ப்பாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்தார். மோடியின் இந்த அதிரடி அறிவிப்பு முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios