Asianet News TamilAsianet News Tamil

முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவருடன் திருமணமா? பாஸ்போர்ட்டை முடக்கி வைத்த அதிகாரி!

Marriage with a Muslim? Officer suspended passport
Marriage with a Muslim? Officer suspended passport
Author
First Published Jun 21, 2018, 4:14 PM IST


முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரி மறுத்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லி, நொய்டாவைச் சேர்ந்தவர் ரண்வீர் சேத். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முகமது சித்திக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் அங்குள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் இருவரும் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்தனர். இதற்காக நொய்டாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்ற அவர்களிடம், விசாரணை நடத்திய அதிகாரி, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்தது குறித்து ரண்வீர் சேத் இடம் விளக்கம் கேட்டார்.

Marriage with a Muslim? Officer suspended passportஇருவரும் மாறுபட்ட மதத்தை பின்பற்றுவது குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். மேலும், பெயரை மாற்றி அரசிதழில் வெளியிட்டால் மட்டுமே பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ரண்வீர் சேத், கணவர் முகமது சித்திக்கின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் முடக்கி வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து ரண்வீர் சேத், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு டுவிட்டரில் புகார் தெரிவித்துள்ளார். அதில் உண்மையான ஆவணங்கள் இருந்தபோதும், வேறு ஒரு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் பாஸ்போர்ட் அதிகாரிகள் அநீதி இழைத்துள்ளனர். எனது கணவர் முஸ்லீம் என்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை. எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு அவமானத்தை நான் சந்தித்ததில்லை. நான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனது குடும்ப விஷயம். இதற்காக எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரிக்கு விளக்கம் கோரி வெளியுறவு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

An inter-faith couple were humiliated & their applications rejected by a passport officer in Lucknow when the latter learnt the lady, a Hindu had married a Muslim man. The officer has now been suspended & Anas and Tanvi have finally got their passports #NewIndia pic.twitter.com/619mo3OaDt

— Poulomi Saha (@PoulomiMSaha) 21 June 2018

 

Follow Us:
Download App:
  • android
  • ios