பொதுவாகவே குடும்பங்களில் மாமியார் - மருமகள் பிரச்சனை இருப்பது வழக்கம் தான். ஆனால் மருமகன் மாமியாருக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்காக, ஆந்திராவை சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக யோசித்து, அசிங்கமான செயலை அரங்கேற்றி தன்னுடைய மாமியாரை பழி வாங்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தை சேர்ந்த 33 வயதாகும் ஒருவர்  தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி உள்ளது. 

திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி, மாமியாருடன் சண்டை சச்சரவு இருந்துள்ளது.  மேலும் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் கூறிவந்துள்ளார்.  இந்நிலையில் தன்னுடைய மாமியாரை பழிவாங்குவதற்காக அவருடைய மொபைல் எண்ணை, ஆபாச தளம் ஒன்றில் பதிவிட்டார்.

59 வயதாகும் அவருடைய மாமியாருக்கு அடிக்கடி சிலர் கால் செய்து ஆபாசமாக பேசியுள்ளனர்.  நாளுக்கு நாள், இந்த பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போனதால், ஒரு நிலையில், அவரின் மாமியார் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில்,  இவரின் மொபைல் எண்ணை, அவருடைய மருமகன்தான் ஆபாச தளத்தில் பதிவு செய்தார் என தெரியவந்தது.  இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.