உத்தரபிரதேசத்தில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரை பொய் என நிரூபிக்க சாமியார் ஒருவர் அவரது பிறப்புறுப்பை அவரே அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

உத்தர பிரதேசத்தில் பாம்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம் சாமியார் மதானி பாபா, தன்னை தானே சாமியாராக அறிவித்த மதானி, அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே ஆசிரமம் கட்ட திட்டமிட்டார். ஆனால் அவர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், மதானி பாபா மீது, அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். 

இதையடுத்து, தன் மீதான புகார் பொய்யானது என நிரூபிக்க, மதானி பாபா, தன் பிறப்புறுப்பை தானே அறுத்தார். அதிக ரத்தப்போக்கால் மயக்கமடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவர் கூறுகையில் தான் ஆசிரமம் கட்டுவதை விரும்பாத ஒரு குழு தனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த குழு தன்னை ஒரு பெண்ணுடன் தொடர்புப்படுத்தி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டது என அவர் கூறியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக தனது பிறப்புறுப்பை அறுத்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.