கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகவம் பாதிப்படைந்துள்ளது.

கேரள மக்கள் இதுவரை 380 கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். நிலசரிவில் சிக்கி பலர் உயிர் இழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு உலக மக்கள் உதவி கரம் நீட்டி வருகின்றனர். அண்டை மாநிலங்கள் முதல் மத்திய அரசு வரை நிதி ஒதுக்கி உள்ளனர்.இந்நிலையில் பல்வேறு காப்பங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அண்டை மாநிலத்தில் இருந்து உணவு உடை மற்றும் பெண்களுக்கு தேவையான நாப்கின் என அனைத்தையும் அனுப்பி வைத்து வருகிறது.


 இந்நிலையில் சவுதியில் வேலை செய்து வரும் கேரள வாலிபர் ஒருவர், "இந்த தருணத்தில், ஆண்களுக்கு தேவையான ஆணுறையையும் சேர்த்து அனுப்பினால் நன்றாக இருக்கும் என மக்களின் மனநிலையை கொச்சைப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார்.

இவரின் இந்த பதிவு அனைவர் மத்தியிலும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. இவரை பற்றி விசாரித்த போது, லுலு நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. இவரின் இந்த மோசமான பதிவால் அந்த நிறுவனம் அவரை வேலையை விட்டு அதிரடியாக நீக்கியது. 

இது குறித்து அந்த நபர் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "நான் இதனை சுய நினைவோடு செய்ய வில்லை..குடி போதையில் இவ்வாறு பதிவிட்டு உள்ளேன் என தனது தவறை உணர்ந்து உள்ளேன்... இதனால் என் வேலையையும் இழந்து உள்ளேன் என தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.