கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை  பாதிரியார்கள் 4 பேர் பலாத்காரம் செய்த விவகாரத்தில், அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான்  உடலுறவு வைத்துக் கொண்டேன் என  பாதிரியார், ஜேம்ஸ் கே.ஜார்ஜ், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 

அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி ராஜா விஜயராகவன், தள்ளுபடி செய்ததுடன் முன் ஜாமீன் வழங்க இயலாது எனவும் தெரிவித்தார். இதையடுத்து 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் . இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவரான, பாதிரியார் ஜேம்ஸ், உச்ச நீதிமன்றத்தில்  அனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தை,தனக்கு  நீண்ட காலமாக தெரியும் என்றும், . அந்தப் பெண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவு வைத்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது, அவரது முழு சம்மதத்துடன் நடந்தது. யாரோ மிரட்டியதால், இந்த புகார் அளிக்கப் பட்டுள்ளது. பாவ மன்னிப்பு பற்றி அந்த பெண் எதுவும் சொல்லவில்லை என்வே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் அதில் கூறியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.