நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் மீண்டும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மிக சிறப்பாக நடித்திருப்பதாக பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். அவரது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு முறை சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வாய்த்துள்ளது. தெலுங்கு இயக்குநர்ன கிரிஷ் ஜகர்லமுடி இதனை இயக்குகிறார்.

முன்னாள் ஆந்திர முதலமைச்சரும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை அவரது மகன் பாலகிருஷ்ணா திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் வரும் சாவித்திரி கதாப்பாத்திரத்தில், கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கப் போவதாக இயக்குநர் கிரிஷ் கூறியுள்ளார். நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தியின் அபார நடிப்பு திறனைக் கண்டு மீண்டும் இந்த படத்தில் பயன்படுத்தப்போவதாக இயக்குநர் கிரிஷ் தெரிவித்துள்ளார்.