கடந்த ஜனவரி மாதம் கத்துவா நகரில், 8 வயது சிறுமியை கடத்தி, போதை பொருள் கொடுக்கப்பட்டு ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டாள். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என ஜம்முவை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான தலீப் உசைன் என்பவர்  ஒரு பேரணியை நடத்தி அதன் மூலம் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமில்லாமல் சிறுமியின் குடும்பத்தினர் சார்பாக ஆஜராகி வாதிட்டனர்.

இந்த தருணத்தில் அவருடைய உறவுக்கார பெண் ஒருவர், தன்னை உசைன் கற்பழிக்க முயான்றார் என புகார் தெரிவித்து உள்ளார்.

அதில், ஜூன் மாதம் நான் வழக்கம் போல் கால் நடைகளுக்கு தேவையான தீவனம் எடுக்க சென்றேன். அப்போது அங்கு இருந்த  உசைன் தன் கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டு என்னை கற்பழிக்க முயன்றார்...நான் எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன். இதை பற்றி வெளியில் சொன்னால், என்னை கொலை செய்து விடுவேன் என தெரிவித்து இருந்தார்...ஒரு கட்டத்தில் ஜூலை 31 ஆம் தேதி இது குறித்து, கணவரிடம் தெரிவித்தேன் என கூறி உள்ளார்

இதன் பின் உசைனை போலீசார் விசாரணை செய்ய அழைத்து சென்று  உள்ளனர். இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, தன் மீது திட்டமிட்டு  யாரோ தூண்டுதலின் பேரில் அவர் இப்படி கூறி இருக்கிறார். நான்  சிறுமியின்  குடும்பத்திற்காக  வாதிட்டதை காரணமாக வைத்து, இவ்வாறு  பொய் குற்றசாட்டை முன் வைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில், உசைனின் மனைவி, தன்னை வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்து உள்ளதால், இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.